குவாரி பள்ளங்களில் நீர் தேங்கியதால் மழை பெய்து பயனில்லை

70பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியனுக்கு உட்பட்ட தெ. புதுக்கோட்டைஅருகே உள்ள கோச்சடையில் 40 ஏக்கரில் அய்யனார் குளம் பொதுப் பணித்துறை கண்மாய் உள்ளது.
நான்கு மடைகள் கொண்ட இக்கண்மாய் மூலம் 120 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கு மழைநீர் வரக்கூடியபகுதிகளில் குவாரி பள்ளங்கள் உள்ளன. இதனால் குவாரி பள்ளங்களை தாண்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது
அய்யனார் குளம் கண்மாய் வறண்டு காணப்படுவதால் 120 ஏக்கர் நிலங்கள் விதைத்தும் அறுவடை செய்யப்படாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன இக்கண் மாய்க்கு வைகை ஆற்றுநீரை கொண்டு வரநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி