வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வருகிறது. இன்று (நவ.25) மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனப்படுகிறது.