ஆகாஷிமா (Aogashima) என்பது ஜப்பானின் தெற்கில் உள்ள ஒரு எரிமலைத் தீவு ஆகும். பூகோளவியல் வல்லுனர்கள் அந்த எரிமலை மீண்டும் வெடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்தாலும் தீவில் வசிக்கும் மக்கள் எரிமலையை சமாளித்து கொள்ளலாம் என்ற மனநிலையில் இருக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல கட்டிட அமைப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களில் எளிதாக மாற்றம் செய்யத்தக்க தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.