சிவகங்கை மாவட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (18. 09. 2024), மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், முனைவென்றி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊரக வீடுகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 60. 00 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.