சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் உள்ள திருக்காம கோடீஸ்வரி சமேத வரகுனேஸ்வர் கோயிலில் சாலை கிராமம் அம்மை அப்பர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் சார்பில் மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி எழுந்தருளிய பின்னர் கைலாய வாத்தியங்கள் முழங்க நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்ட வீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்ட மேடையில் ஈரோடு திருஞானசம்பந்தர் திருமடத்தைச் சேர்ந்த அருட் குருநாதர் சிவாக்கர தேசிக சுவாமிகள், கடலூர் மாவட்டம் வேப்பூர் திருநாவுக்கரசர் திருமடத்தைச் சேர்ந்த தங்கதுரை சுவாமிகள் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவாற்றினர். குருபூஜை விழாவில் சாலை கிராமம் சுற்று வட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள் பக்தர்கள் இன்று மாலை சுமார் ஆறு முப்பது மணி வரை கலந்து கொண்டனர்.