ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் தர்ணா

71பார்த்தது
ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தினர் தர்ணா
மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டக்கிளை சார்பில் அரண்மனை வாசலில் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம். ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இல. சுசிலாதேவி முன்னிலை வகித்தார். சிவகங்கை வட்டச்செயலர் எல். ஜோசப்இருதயம் வரவேற்றார். கோரிக்கைகள்: ஓய்வூதியர்களுக்குக் கட்டணமில்லா சிகிச்சையை அனைத்து நோய்களுக்கு மாக உறுதிப்படுத்த வேண்டும்.
சிகிச்சைச் செலவைக் குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மீதும், அதிகக்கட்டணம் வசூல் செய்யும் மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் செலவிட்ட மருத்துவ செலவினங்களை மீளக் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொகைகளை மீளக் கேட்டு அனுப்பப்படும் மனுக்களின் நிலைகளை அறிந்திட உதவியாக டிராக்கிங் சிஸ்டம் வலைத்தளத்தை உருவாக்க வேண்டும்.
என். ஹெச். சி. எஸ். திட்டம் முழுமையாகப் பயன்தர கருவூலஆணையர் ஓய்வூதிய இயக்குனர் ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி