வீடு கட்டி வசிப்பவர்களை, காலி செய்யுமாறு கூறுவதாக புகார்.

1042பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் புது காலனி பகுதியில் கடந்த 1995ம் ஆண்டு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த சுமார் 130 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் குடியிருப்பவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் அந்த இடம் தனியாருக்கு சொந்தமான இடம் என்று கூறி வீடுகளை விட்டு காலி செய்யுமாறு வற்புறுத்தி வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர். கூலி வேலை செய்து சிறுக சிறுக பணம் சேர்த்து அரசு வழங்கிய பட்டா இடத்தில் வீடுகளைக் கட்டி கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வருகிற நிலையில் தற்போது எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்யுமாறு அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த இடத்தை விட்டு காலி செய்தால் எங்களது வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை எங்களுக்கே நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி