சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்த ஆட்சியர்

83பார்த்தது
சிவகங்கை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இன்று காலை சுமார் 11. 30 மணியளவில்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ. ஆ. ப. , அவர்கள், குத்துவிளக்கேற்றி வைத்து, சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும். கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி