4 வழிச்சாலையின் தரம் உயர்த்த நவீன15 சென்சார்களுடன் ஆய்வு.

82பார்த்தது
மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலையில் தினசரி ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் நான்கு வழிச்சாலையின் தரம், உறுதி தன்மை, தினசரி செல்லும் வாகனத்தின் தன்மைக்கு ஏற்ப சாலை சேதமடைகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 45 மீட்டர் அகலமுள்ள சாலையில் 15 மீட்டர் அகலத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த 15 மீட்டரில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு என தயாரிக்கப்பட்ட வாகனத்தின் முன்புறம் 15 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் மூன்று மீட்டர் அகலத்தில் உள்ள சாலையை ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளும். அதற்கு அடுத்து மறுபடியும் மூன்று மீட்டர் அகலத்தை ஸ்கேன் செய்யும், நான்கு வழிச்சாலையில் மொத்தம் நான்கு முறை இந்த வாகனம் கடந்து சென்று ஸ்கேன் செய்யும், மேலும் வாகனத்தின் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்போது முத்தனேந்தல் பகுதிகளில் சாலைகள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனத்தின் பின்புற சக்கரங்களில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு கடக்கும் தூரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு சாலைப்போக்குவரத்து தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் வசம் சமர்ப்பிக்கப்படும், ஸ்கேன் பதிவுகளை ஆய்வு செய்து தேவையான இடங்களில் சாலையின் தரத்தை மேம்படுத்தவும், சாலையை உயரமாக அமைக்கவும் திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

தொடர்புடைய செய்தி