ஸ்ரீ சேவக மூர்த்தி அய்யனார் கோயில் 1008 திருவிளக்கு பூஜை

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சேவகமூர்த்தி அய்யனார் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் இவ்விழா விமர்சையாக நடைபெற்றது. சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இக்கோயில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் 1008 திருவிளக்கு மந்திரங்கள் முழங்க பெண்கள் முதலில் தாங்கள் எடுத்து வந்திருந்த குத்துவிளக்குகளை அலங்கரித்து தீபம் ஏற்றினர். சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்கள் சொல்லச் சொல்ல அதைப் பூஜை செய்யும் பெண்களும் கூறி தங்களின் விளக்குகளுக்கு பூக்கள், மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து தீப, தூப அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி