சிவகங்கை: மகன் திட்டியதால் தாய் தற்கொலை போலீசார் விசாரணை

71பார்த்தது
சிவகங்கை: மகன் திட்டியதால் தாய் தற்கொலை போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருமணம் செய்து வைக்காத தாயை மகன் திட்டியதால் தாய் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தீர்த்தக்கரையை சேர்ந்தவர் ராமலட்சுமி 65. இவரது மகன் சிவக்குமார். திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மது குடித்து விட்டு சிவக்குமார் தனது தாய், தந்தையை திட்டியுள்ளார். இதில் மனம் உடைந்த ராமலட்சுமி காரைக்குடியிலுள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறி இங்கு வந்து விஷம் அருந்தினார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார். ராமலட்சுமி மகள் ஜமுனா ராணி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி