சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி, திருவேகம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம், தேவகோட்டை காசி நாகராஜன் கல்வி அறக்கட்டளை, வி. வி. எல் மோட்டார்ஸ் யமகா ஆகியோர்கள் இணைந்து புகையிலை இல்லா இளைய தலைமுறையை உருவாக்குவோம் எனும் பொருண்மையயை விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் செபாஸ்டியன், முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜான் வசந்தகுமார் ஆகியோர்கள் தலைமையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. டிஎஸ்பி பார்த்திபன் சிவன் கோயிலில் இருந்து கண்டதேவி சாலை வழியாக கல்லூரி வரை நடைபெற்ற மாரத்தான் போட்டியைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தேவகோடைடை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் இ. ஆ. ப பரிசு வழங்கி பாராட்டினார்கள். வட்டாரா சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், ஆலோசகர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர்கள், கல்லூரியின் துணை முதல்வர் அருட்தந்தை ஜார்ஜ் பெர்னாண்டஸ், வழக்குரைஞர் ஹரி பிரசாத் பேராசிரியர்கள் முனைவர் தர்மராஜ், கார்த்திக், அருண் பிரியா, தேன்மொழி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜெனோ ராஜி செய்திருந்தார்.