டி.என்.பி.சி தேர்வு பயிற்சிக்கு வந்த இளம் பெண் மாயம்

583பார்த்தது
டி.என்.பி.சி தேர்வு பயிற்சிக்கு வந்த இளம் பெண் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம் புதுநிலை பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (60). இவரது 20 வயது மகள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள தனியார் அகாடமி பயிற்சி மையத்தில் டி. என். பி. சி தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பயிற்சிக்கு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களும் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியாததால் தந்தை வெள்ளைச்சாமி கொடுத்த புகாரில் காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 20 வயது இளம்பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி