தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம்

51பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் 34 ஆவது வார்டுக்கு உட்பட்ட பாப்பாவூர்ணி பகுதியில் சுமார் 50 குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம், கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த அங்கன்வாடி மையம் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் முழு அளவில் சேதமடைந்தது. அதனை தொடர்ந்து ரூ 5 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழைய சுவர்களின் மீது புதிய சுவர்கள் கட்டப்பட்டு வருவதாகவும், தரமற்ற நிலையில் உள்ள பழைய ஆஸ்பெட்டஸ் சீட்டு, பழைய கதவுகள், பழைய மரங்களை பயன்படுத்த உள்ளதாகவும், இந்த தரமற்ற கட்டுமான பணியினால் இந்த பகுதியில் அங்கன்வாடி மையத்தில் படிக்கக்கூடிய குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த கட்டிடங்கள் இருக்கும் என அச்சம் தெரிவித்த பொதுமக்கள், எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடைபெற்று வரும் இந்த பணியை நிறுத்திவிட்டு, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி