துணிக்கடையில் பணிபுரிந்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலி.

58பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
செக்காலை ரோட்டில் தனியார் பிரம்மாண்ட துணிக்கடை இன்று திறக்கப்பட உள்ளது.
இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில்,
விளக்குகள் அலங்கரிக்கும் பணியில் கல்லலை சேர்ந்த எலக்ட்ரீசியன் மோகன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில்,
திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்த மோகன்
தனியார் துணிக்கடையில் ஆரம்பம் முதலே எலக்ட்ரீசியனாக பணி செய்து வந்ததாகவும்,
நாளை திறப்பு விழா காண இருந்த நிலையில், மோகனின் உயிரிழப்பு நிகழ்ந்தது சக ஊழியர்களிடம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி