சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள வாழ்கின்றமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த டோல்வின் விண்ணரசி(20). இவர் தேவகோட்டையிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிஏ- ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று வீட்டிலிருந்தவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கல்லூரிமாணவியின் தந்தை ஆரோக்கியசெல்வராஜ் , ஆறாவயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் நேற்று வழக்குப்பதிவு செய்து, இன்று காலை 11. 30 மணியளவில் காணாமல் போன கல்லூரி மாணவி குறித்து விசாரித்து வருகிறார்.