நகைக்கடை கொள்ளை வழக்கில் 5 பேருக்கு ஏழாண்டு சிறை

60பார்த்தது
நகைக்கடை கொள்ளை வழக்கில் 5 பேருக்கு ஏழாண்டு சிறை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் மதன்லால் மேத்தா. இவா் காரைக்குடி அம்மன் சந்நிதி தெருவில் வைர நகைக் கடை நடத்தி வந்தாா். கடந்த 2000-ஆம் ஆண்டு, நவம்பா் 28 -ஆம் தேதி இரவில் இவரது கடைக்குள் சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த செல்லக்கண்ணு மகன் மணி (58), செல்லமுத்து மகன் கருப்பையா (54), புதுவயல் பகுதியைச் சோ்ந்த குமாா் (54), மித்ராவயல் பகுதியைச் சோ்ந்த ஹரிஹரன் (55), கருநாவல்குடியைச் சோ்ந்த சின்னப்பன் (74), குமாா், கருப்பையா (56), ஆறுமுகம் (65), செல்லப்பாண்டி (52) ஆகிய 8 பேரும் புகுந்து, அங்கிருந்தவா்களைத் தாக்கி விட்டு, ரூ. 74 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து காரைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து மணி, குமாா், ஹரிஹரன், சின்னப்பன், ஆறுமுகம், கருப்பையா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாண்டில்யன், குற்றஞ்சாட்டப்பட்ட குமாா், ஹரிஹரன், சின்னப்பன், கருப்பையா, குமாா் ஆகிய 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து  தீா்ப்பளித்தாா். வழக்கு விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட மணி இறந்து விட்டாா். மேலும் ஆறுமுகம், செல்லப்பாண்டி ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி