சுகாதாரமாக இருக்கவும், கிருமிகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் ஒரு நாளைக்கு 5-10 முறை கைகளை கழுவினாலே போதுமானது. சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும், கழிப்பறைகளை பயன்படுத்திய பின்னர், இருமல், தும்மல் போன்றவற்றிற்குப் பிறகு கைகளை கழுவ வேண்டும். பொது போக்குவரத்து, கதவின் கைப்பிடிகள் ஆகியவற்றை தொட்ட பின்பு கட்டாயம் கைகளை கழுவ வேண்டும். அடிக்கடி கை கழுவினால் சருமப் பிரச்சனைகள், சரும வறட்சி, சருமத்தில் எரிச்சலை உண்டாக்கலாம்.