காலையில் காரை ஸ்டார்ட் செய்த உடனே ஓட்ட ஆரம்பிக்கும் போது, இன்ஜின் சரியாக லூப்ரிகேட் ஆகாமல், அதன் பாகங்கள் தேய்ந்து, இயந்திரத்தின் ஆயுளைக் குறைக்கிறது. ஏனென்றால், இரவில் காரை நிறுத்தும்போது, இன்ஜின் ஆயில் எஞ்சினுக்குள் ஒரே இடத்தில் தேங்கிவிடும். காலையில் காரை ஸ்டார்ட் செய்த பிறகு கியரில் போடாமல் 30 முதுல் 40 வினாடிகளுக்கு இன்ஜினை மட்டும் இயக்கினால், இன்ஜினின் ஒவ்வொரு பாகங்களும் நன்றாக லூப்ரிகேட் ஆகும். இதனால், காரும் நல்ல மைலேஜை தரும்.