சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ரிலீஸ்

84பார்த்தது
சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ரிலீஸ்
மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த நிலையில், இன்று (ஜூன் 6) படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மிஸ் யூ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி