அக்னிவீர் திட்டத்தை அமல்படுத்த நிதீஷ்குமார் எதிர்ப்பு

64பார்த்தது
அக்னிவீர் திட்டத்தை அமல்படுத்த நிதீஷ்குமார் எதிர்ப்பு
பாஜக அரசு கொண்டு வந்த அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் அக்னிவீர் திட்டத்தை பல மாநிலங்கள் எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் ஜே.சி தியாகி செய்தியாளர்களை சந்தித்தபோது, அக்னிவீர் திட்டம், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய திட்டங்களை உரிய ஆலோசனைக்கு பிறகு அமல்படுத்த அல்லது மறு ஆய்வு செய்ய பாஜக அரசை வலியுறுத்தி இருப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி