"ஷேக் ஹசீனா உறுதியாக வங்கதேசம் திரும்புவார்"

82பார்த்தது
"ஷேக் ஹசீனா உறுதியாக வங்கதேசம் திரும்புவார்"
ஷேக் ஹசீனா உறுதியாக வங்கதேசம் திரும்புவார் என்று அவரது மகன் சஜீப் வசேத் தெரிவித்துள்ளார். பிடிஐ-க்கு பேட்டியளித்த சஜீப் வசேத், "எனது தாயார் ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திரும்புவாரா? அரசியல் செயல்பாட்டுடன் திரும்புவாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஷேக் முஜிபுர் ரஹ்மான் குடும்ப உறுப்பினர்கள் நாட்டு மக்களை கைவிட்டுவிட மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி