வங்கதேச கலவரத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியிலேயே தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஷேக் ஹசீனா எங்கு செல்வார் என்பது இன்று (ஆகஸ்ட் 06) தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா நேற்று மாலை 6 மணியளவில் டெல்லியில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார். பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கிடைக்கும் வரை ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.