சம்பளம் வாங்காமல் நடித்த ஷாரூக்கான்!

59பார்த்தது
சம்பளம் வாங்காமல் நடித்த ஷாரூக்கான்!
'இந்தியன் 2' படத்தின் மும்பை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், “ஹேராம் படத்தை நாங்கள் உருவாக்கிய போது, நான் ஷாரூக்கை ஒரு சூப்பர்ஸ்டாராகவோ, அவர் என்னை ஒரு சூப்பர் இயக்குநராகவோ நினைக்கவில்லை. நண்பர்களாக இணைந்து பணியாற்றினோம். இன்னும் சொல்லப் போனால், ஹேராமில் ஷாரூக் எந்த சம்பளமும் வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்தார். அதை எந்த சூப்பர்ஸ்டாரும் செய்யமாட்டார்கள். அதை கலையை ரசிக்கும் ஒரு நல்ல நடிகரால் மட்டுமே செய்ய முடியும். அதற்கு நான் ஷாரூக்கிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி