வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 4 பேர் பலி

50பார்த்தது
வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 4 பேர் பலி
கர்நாடக மாநிலம் மங்களூருவில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதனி நகரா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்த சத்தம் கேட்டு அங்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி