கிருஷ்ணகிரியின் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆகஸ்ட் 5 முதல் 9 வரை மாணவிகளுக்கான என்சிசி பயிற்சி நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் பங்கேற்ற நிலையில் 13 பேருக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிவராமன் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையில் சிவராமன் குறித்து அறிந்தும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டி நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.