மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பத்லாபுரில் 4 வயது சிறுமிகள் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பத்லாபூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றச் செயலில் ஈடுபட்ட பள்ளியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளியை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வர மகாராஷ்ட்ரா போலீசார் முயற்சித்து வருகின்றனர்.