தேர்வு பயத்தால் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பிளஸ் டூ மாணவர் ஒருவர் புரளியை கிளப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர் ஒருவர் சிக்கினார். இவர் 6 முறை போலி வெடிகுண்டு மிரட்டல் செய்தியை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். தேர்வை ரத்து செய்யும் நோக்கில் இவ்வாறு செய்ததாக போலீசிடம் அந்த மாணவர் கூறியுள்ளார். அவரது பெற்றோரை வரவழைத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.