நடிகை ரேவதி சம்பத் மலையாள நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மற்றும் ரியாஸ்கான் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சித்திக் நடிகர் சங்க பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். தொடர்ந்து நடிகை மினுமுனீர் நடிகர் முகேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது புகார் அளித்திருந்தார். மேலும் நடிகை ஸ்ரீலேகா மித்ரா இயக்குனர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது புகாரளித்துள்ளார். இதனால் மலையாள சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் பதவி விலகினார்.