கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கைதாகி உள்ள நபர்கள் வேறு மாவட்டங்களில் இது போன்று போலியாக முகாம்களை நடத்தி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் விசாரணை விரிவுபடுத்தப்படும் என்றும் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.