கேரளாவை சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார். விளையாட்டு வீராகனையான அந்த இளம்பெண் தான் 13 வயதில் இருந்தே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். 13 வயதில் இருந்தே பயிற்றுநர்கள், விளையாட்டு வீரர்கள், நண்பர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 62 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.