ஹரியானா முன்னாள் அமைச்சர் சந்தீப் சிங் மீது சண்டிகர் நீதிமன்றம் திங்கள்கிழமை பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும். 2022 டிசம்பர் 26 அன்று சந்தீப் சிங் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜூனியர் பெண்கள் பயிற்சியாளர் குற்றம் சாட்டினார். அவர் தனது இல்லத்தில் வைத்து அத்துமீறியதாக கூறினார். ஆனால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை சிக்க வைத்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.