செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிப்பது குறித்து தலைமை தெரிவிக்கும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளதை ஒரு வெற்றி, மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும், முதலமைச்சரும் முடிவெடுப்பார்கள்" என்று பேட்டியளித்துள்ளார்.