செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு

58பார்த்தது
செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரது நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 6ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 23 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி