செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

56பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளை (மே 16) ஒத்திவைத்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற அமலாக்கத்துறை கோரியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை காலதாமதப்படுத்தவே அமலாக்கத்துறை அவகாசம் கோருவதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படுகிறது. கடந்த இரண்டு முறை இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போதும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி