மும்பை பங்குச்சந்தை எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் நேற்று (டிச.20) குறைந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.9 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது போன்ற காரணங்களால் வாரத்தின் 5வது நாளிலும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் கடும் சரிவுடன் நிறைவடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.