பாஜக மூத்த தலைவர் காலமானார்

13354பார்த்தது
பாஜக மூத்த தலைவர் காலமானார்
பாஜக மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் நெருங்கிய நண்பருமான கே.பி. சித்தலிங்கசாமி காலமானார். இவர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மைசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஜுன் 6) காலை உயிரிழந்தார். 2013ல் வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதே போல், கர்நாடக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி