வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரம்.. 5 பேர் பலி (வீடியோ)

9476பார்த்தது
ஜெர்மனி பெரும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தெற்கு ஜெர்மனியில் உள்ள பவேரியாவில் கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார்களும் அடித்து செல்லப்பட்டன. குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக பவேரியா மற்றும் பேடன் வூர்ட்டம்பேர்க் ஆகிய பகுதிகளில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி