வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறாரா பிரியங்கா காந்தி..?

11853பார்த்தது
வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறாரா பிரியங்கா காந்தி..?
மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், அவர் ஏற்கனவே எம்.பி., ஆக இருந்த வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. வயநாடு தொகுதியில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுலுக்கு பதிலாக சரியான வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை நிறுத்தி வெற்றி வாகை சூட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதே வேளையில் இந்த தொகுதியில் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தவும் கட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி