திமுக கூட்டத்தில் பிரியாணிக்காக முண்டியடித்த நிர்வாகிகள்

82பார்த்தது
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜுன் 5) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். கூட்டம் முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிரியாணியை வாங்க கட்சியின் நிர்வாகிகள் கூட்ட நெரிசலில் முண்டியடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி