அண்ணாமலையால் நடுரோட்டுக்கு வந்த பாஜக பிரமுகர்.. (வீடியோ)

19587பார்த்தது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், கட்சி பிரமுகர் ஒருவர் மொட்டையடித்துக் கொண்டார். 'அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன்' என மாற்றுக்கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டிய பாஜக பிரமுகர் ஜெய்சங்கர் என்பவர், தேர்தல் முடிவு வந்த பிறகு நடுரோட்டில் மொட்டையடித்துக் கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்த ஜெய்சங்கர் நேற்று (ஜுன் 5) நடுரோட்டில் அமர்ந்து மொட்டையடித்து, மீசையையும் எடுத்தார். தொடர்ந்து நடுரோட்டில் மினரல் வாட்டர் கேன் மூலம் குளியல் போட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே வியப்பை ஏற்படுத்தியது.

நன்றி வீடியோ: பாலிமர் செய்திகள்

தொடர்புடைய செய்தி