சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

13632பார்த்தது
சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று (ஜுன் 5) வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நைனிடால் மாவட்டத்தின் ஒக்கல்கண்டா தொகுதியில் உள்ள பூடாபுரி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒகல்கண்டாவில் உள்ள ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி