மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன் காலமானார்

83பார்த்தது
மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன் காலமானார்
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், அரசியலமைப்பு நிபுணர் ஃபாலி எஸ். நாரிமன் (95) காலமானார். டெல்லியில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானார். 1971 முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1972-75 வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். அவருக்கு 1991 இல் பத்ம பூஷன் மற்றும் 2007 இல் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டது. ராஜ்யசபா உறுப்பினராகவும், இந்திய பார் அசோசியேஷன் தலைவராகவும் பணியாற்றினார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சட்டத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி