பாஜக அலுவலகத்தில் குவிந்த பாதுகாப்புப் படை

84பார்த்தது
பாஜக அலுவலகத்தில் குவிந்த பாதுகாப்புப் படை
டெல்லி பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (மே 18) அறிவித்திருந்தார். அதன் பேரில் இன்று (மே 19) பாஜக அலுவலகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுடன் கெஜ்ரிவால் பேரணியாக சென்றுகொண்டிருக்கிறார். இந்த நிலையில், பாஜக அலுவலகத்தில் ஏற்படும் மோதலை தடுக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர்கள் வரிசையாக கைது செய்யப்படுவதை கண்டித்து இந்த போராட்டம் நடத்துவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி