வழிப்பறி - மேலும் 2 பாஜக நிர்வாகிகள் கைது

61பார்த்தது
வழிப்பறி - மேலும் 2 பாஜக நிர்வாகிகள் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மாவட்ட பாஜக நிர்வாகிகள் ராஜேஷ் மற்றும் நவீன் ஆகியோரை போலீசார் நேற்று (மே 18) கைது செய்தனர். தொடர்ந்து, காட்பாடி போலீசார் இருவரையும் இன்று (மே 19) வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக இதேபோல் வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் சதீஷ் கைது செய்யப்பட்டார். ஒரே நாளில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி