சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குடும்பத்தினர் 164 பேர் தங்களது சொந்த பங்களிப்பில் உணவுக்கான பொருட்களை சென்னையிலிருந்து வாங்கி வந்தனர். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் எல்லையின் காவல் தெய்வமான, அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயிலில் தங்கி அவர்களே சமைத்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் 3 நேரமும் அன்னதானம் வழங்கினர். சுமார் 1.5 டன் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளைக் கொண்டு 30 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினர்.