கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

77பார்த்தது
கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர், "ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான Post-Matric மற்றும் Pre-Matric கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி