சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டை நவம்பர் 26, 1947 அன்று தாக்கல் செய்தவர் மத்திய நிதியமைச்சர் ஆர்.கே சண்முகம் செட்டியார். கோவையை சேர்ந்த இவர், பிரதமர் நேருவின் அமைச்சரவையில் ஓராண்டு காலம் நிதியமைச்சராக பதவி வகித்தார். வரலாற்று சிறப்புமிக்க வகையில் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெருமை பெற்றவர். முதல் பட்ஜெட்டில் ரூ.197.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ரூ.92.74 கோடி ஒதுக்கப்பட்டது.