ஹரியானாவில் போட்டியிடும் நடிகர் சஞ்சய் தத்?

73பார்த்தது
ஹரியானாவில் போட்டியிடும் நடிகர் சஞ்சய் தத்?
ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் போட்டியிட இருப்பதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நான் அரசியலுக்கு வரப்போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. அரசியலில் இறங்க முடிவு செய்தால், அதனை நானே அறிவித்துவிடுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி