ஒரே அளவு யூனிட், இரு வேறு கட்டணம் வசூல் - அரசு விளக்கம்!

57பார்த்தது
ஒரே அளவு யூனிட், இரு வேறு கட்டணம் வசூல் - அரசு விளக்கம்!
2023 ஆகஸ்ட் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.2,740, அக்டோபர் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்துக்கு 5.3,830 மின்வாரியம் வசூலித்திருக்கிறது என்று நுகர்வோர் மின் அட்டையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து மறுப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் ஏதும் தற்போது உயர்த்தப்படவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அளிக்கையில், 720 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.3830 தான் வசூலிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்ட நுகர்வோர் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1090 வைப்புத் தொகை வைத்திருந்ததால், அத்தொகையும் அதன் வட்டி ரூ.4.68யும் கழிக்கப்பட்டு 5.2735 மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். வதந்திகளை நம்பாதீர்! என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி